வானிலை முன்னறிவிப்பு
இலங்கைக்கு தென்மேற்காக காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது இலங்கையை விட்டு விலகிச் சென்று கொண்டுள்ளது. எனவே நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில்
காணப்படும் மழையுடன் கூடிய நிலைமை நவம்பர் 11ஆம் திகதியிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது
மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஓரளவு குளிரான வானிலை எதிர்பார்க்கப்படுகின்றது
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நண்பர்களுடன் பகிரவும்
24 Hour New News

No comments:
Post a Comment