Monday, October 8, 2018

வானிலை அவதான நிலையம் சற்றுமுன் பொதுமக்களுக்கு விடுத்த அறிவிப்பு (காணொளி)

தென்கிழக்கு  வங்காளவிரிகுடாவில் நிகழும்  வளிமண்டல குழப்பநிலை தற்போதைய நிலையில் குறைந்த காற்றழுத்தமாக மாறியுள்ளதால் நாளை மற்றும் நாளை மறுதினம் நிலவும் மழையுடனான காலநிலையில் அதிகரிப்பை  எதிர்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.( 24 Hour New News )



 அதன்படி எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேல் , வடமேல் , மத்திய , ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி , மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என அந்த  நிலையம் குறிப்பிட்டுள்ளது.( 24 Hour New News )


இடியுடன் கூடிய மழை பெய்யும் பிரதேசங்களில் மணிக்கு 80km வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும்  என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.( 24 Hour New News )


வங்கக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.( 24 Hour New News )

மேலதிக விபரங்களுக்கு காணொளியில்
https://youtu.be/OBISUWZWeA8

 ( 24 Hour New News )

நண்பர்களுடன் பகிரவும்

No comments:

Post a Comment