Monday, October 1, 2018

இரண்டு இலட்சம் இலங்கையர்களுக்கு சவுதி அரேபியாவில் தொழில் வாய்ப்பு

இலங்கையைச் சேர்ந்த சுமார் இரண்டு இலட்சம் பேருக்கு சவுதி அரேபியாவில் தொழில் வாய்ப்பு கிட்டவிருப்பதாக அமைச்சர் ரிஷாத் பரியுத்தீன் தெரிவித்துள்ளார்.( 24 Hour New News )



நட்பு நாடு என்ற ரீதியில் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு 30 கோடி அமெரிக்க டொலர்கள் கடன் உதவியாக கிடைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.( 24 Hour New News )

2014, 2017 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் மாத்திரம் இலங்கைக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளின் பெறுமதி 21 கோடி அமெரிக்க டொலர்களுக்கும் மேலாகும்.( 24 Hour New News )

கடந்த வருடத்தில் இலங்கையில் இருந்து சவுதி அரேபியாவுக்கு இரண்டு கோடியே 70 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.( 24 Hour New News )

No comments:

Post a Comment