19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.( 24 Hour New News )
ஆப்கானிஸ்தானை அரை இறுதியில் வீழ்த்திய இலங்கை இறுதிப்போட்டியில் நாளை மறுதினம் (07) இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.( 24 Hour New News )
19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் நடைபெறுகிறது.
இதன் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று விளையாடின.( 24 Hour New News )
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்களைப் பெற்றது.( 24 Hour New News )
அணித்தலைவர் நுவனிது பெர்னாண்டோ 129 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகளுடன் 111 ஓட்டங்களைக் குவித்தார்.( 24 Hour New News )
பந்து வீச்சில் அப்துல் ரஹ்மான் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.( 24 Hour New News )
210 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய ஆப்கானிஸ்தான் அணியால் 48 .3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 178 ஓட்டங்களையே பெற முடிந்தது.( 24 Hour New News )
பந்து வீச்சில் சசிக டுல்ஷான் 9.3 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.( 24 Hour New News )

No comments:
Post a Comment