- இறந்தோரின் எண்ணிக்கை 1571 எனவும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும், 70,000 இற்கும் மேற்பட்டோர் தமது இருப்பிடங்களைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் இந்தோனேசிய அனர்த்த முகவரகப் பேச்சாளர் சுடோபோ புர்வோ நுக்ரேஹோ புதன்கிழமையன்று தெரிவித்தார்.( 24 Hour New News )
நேரடியாகப் பாதிக்கப்பட்ட சுலாவெசி தீவிலுள்ள பலு நகரை அண்டிய பகுதிகளுக்கு உணவு, தண்ணீர், எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்கள் வந்தடைவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. அங்கு பெருமளவில் தேவைகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.( 24 Hour New News )
வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்ற 7.5 ரிச்டர் அளவான பூகம்பம் மற்றும் அதனையடுத்து இடம்பெற்ற சுனாமியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 200,000 பேருக்கு அவசர உதவிகள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அலுவலகம், இவர்களுள் ஏராளமான சிறுவர்கள் உள்ளடங்குவதாகவும், 66,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.( 24 Hour New News )

No comments:
Post a Comment