Monday, October 1, 2018

24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

BREAKING NEWS

இலங்கைக்கு மேற்கு மற்றும் தென்மேற்காக அமைந்துள்ள கடற்பரப்புகளில் காணப்படும் இயங்குநிலை மேகக்கூட்டங்கள் காரணமாக இக் கடற்பரப்புகளில் கடும் மழை/இடியுடன் கூடிய மழை, திடீரென்று கடல் கொந்தளித்தல், காற்றின் வேகமானது அவ்வப்போது 70-80 கிலோ மீற்றர் வரை திடீரென்று அதிகரித்தல் போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.( 24 HOUR NEW NEWS )



 இயங்குநிலை மேகக்கூட்டமானது அடுத்த சில மணித்தியாலங்களுக்கும் தொடர்ந்து நிலைத்திருக்கக் கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.( 24 HOUR NEW NEWS )

2018 செப்டம்பர் 30ஆம் திகதி மாலை வரையான காலப்பகுதியில் பாணந்துறையிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அக் கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படுவதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது,( 24 HOUR NEW NEWS )


புத்தளத்திலிருந்து கொழும்பு காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.( 24 HOUR NEW NEWS )

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.( 24 HOUR NEW NEWS )

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.( 24 HOUR NEW NEWS )

No comments:

Post a Comment